உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai

Song Lyrics :

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்
மகத்துவரை துதிப்போம் – அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம்

1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே
உம்மை நோக்கி நான் காத்திருப்பேன்
நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன்
நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன்

கையை திறந்தால் நான்
திருப்தியாவேன்
முகத்தை மறைத்தால்
திகைத்துப் போவேன்

2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டை
பூமிக்கு ஆடை வானுக்குத் திரை
உமது கிரியையால் உலகம் நிறைந்தது
உமது ஞானம் மிகவும் பெரியது

3. தூதர்களை காற்றுகளாய் மாற்றி
ஊழியர்களை அக்கினியாக்கி
மனுஷனுக்கு நீர் வேலையைக் கொடுத்து
இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர்

Leave a Comment